பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்...
பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்... ஆரூர் சுந்தரசேகர். பஞ்ச பூதங்களின் மொத்த உருவே இப்பிரபஞ்சம். “ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ” என்கிறது உபநிஷதம். உலகில் சிருஷ்டிக்கு அடிப்படை இந்த ஐந்துமே ஆகும் அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்கள். இதேபோல மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் திருமூலர் தன்பாடலில், “அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போது” என குறிப்பிட்டுள்ளார். “பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம் தரமாறில் தோன்றும் பிறப்பு” என்கிறார் ஒளவையார். பஞ்சபூதங்கள் என அழைக்கப்படும் நீர், நிலம், நெருப்பு, காற்று,ஆகாயம் ஆகிய ஐந்து தன்மைகள் ஒன்றிணைந்தே இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. கரு நிலையில் உள்ள உண்மை சக்தி தன்னை வெளிப்படுத்துவதற்காக பஞ்சபூதங்களாக உருமாறுகிறது. இதன் கலவை மாறின் புதிய புதிய பிறப்புகள் தோன்றுகிறது என்று ஒளவையார் பாடியுள்ளார். “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம...