ஜகத்குரு ஆதிசங்கரரும், லட்சுமி கடாக்ஷம் அருளும் கனகதாரா ஸ்தோத்திரமும்.....

ஜகத்குரு ஆதிசங்கரர் இந்து தர்மம் தழைக்கச் செய்தவர்களில் ஒருவர். சங்கரன் என்பதற்கு நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்ற பொருளுண்டு.
ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து கடமைகளையும் ஆதிசங்கரர் தமது நூல்களில் தொகுத்து அளித்துள்ளார். அத்வைத சித்தாந்தத்தைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அளவுக்குச் சிறிய மற்றும் பெரிய நூல்களை ஆதிசங்கரர் எழுதியுள்ளார். அனைத்தும் எளிய முறையில், உயர்வான தத்துவங்களைக் கொண்டதாக உள்ளன.
ஜகத்குரு ஆதிசங்கரர் அவதாரம்:
இன்றைய கேரளா மாநிலத்திலுள்ள இயற்கை செழிப்பான காலடி என்ற கிராமத்தில் பிராமண சமூகத்தை சேர்ந்த சிவகுரு, ஆரியாம்பாள் தம்பதியருக்கு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வைகாசி மாதம் பஞ்சமி தினத்தன்று இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தையாக அவதரித்தார். சங்கரருக்கு நான்கு வயது ஆகும்போது அவரது தகப்பனார் இயற்கை எய்தினார். அவரது தாய் சங்கரருக்கு ஐந்தாம் வயதில் உபநயனம் செய்வித்தார். பூணூல் அணிந்த பின் தகுந்த குருவிடம் வேதம், சாஸ்திரம் முதலியவைகளை பயில சேர்த்து விட்டார். குருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்துவிட்டு, பிறகு உண்பது சங்கரரின் வழக்கமாயிருந்தது. அவ்வாறு பிக்ஷை ஏற்கும் போது நடந்த நிகழ்வில் தான் ஆதிசங்கரர் “கனகதார ஸ்தோத்திரம்” பாடியதாகக் கூறப்படுகிறது.
கனகதார ஸ்தோத்திரம் பிறந்த கதை:
ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் ஒரு ஏழ்மையான பெண்மணியின் வறுமையைப் போக்க பாடிய ஸ்தோத்திரம் ஆகும்.
கனகதார ஸ்தோத்திரம் என்பது மகாலட்சுமியை துதித்துப் பாடுவது. “கனகதாரா” கனகம் மற்றும் தாரா என்னும் இரண்டு சமஸ்கிருத வார்த்தைகள். கனகம் என்பது தங்கம் மற்றும் செல்வத்தை குறிப்பது மற்றும் தாரா என்பது ஒருவர் வைத்திருப்பதை குறிப்பதாகும். மகாலட்சுமி தேவி கையில் தங்கம் வைத்திருப்பதை புகழ்ந்து அழைக்கும் பெயராக இது கருதப்படுகிறது.
ஆதிசங்கரர் தினமும் சில வீடுகளில் பிக்ஷைக்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் ஒரு பிராமணரின் வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டார். வாசலில் வந்து பிக்ஷை கேட்ட சிறுவன் சங்கரனைப் பார்த்தபோது, சிவபெருமானே சிறுவன் வடிவில் வந்து பிக்ஷை கேட்பது போல் அந்த வீட்டு பெண்மணிக்கு தோன்றியது. இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக தன்னிடம் ஏதுமில்லையே என்று வருந்தினாள். ஆனாலும், அவள் சமையல் அறைக்குச் சென்று தேடி பார்த்ததில் ஒரே ஒரு பழைய நெல்லிக்காய் மட்டும் இருந்தது. ஒரு நெல்லிக்காயை சங்கரருக்கு மனமுவந்து அளித்தாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் கருணைச் செயல் சங்கரரின் கண்களை குளமாக்கியது.
வறுமையில் வாடும் போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த சங்கரர், அந்தப் பெண்மணியின் அன்பில் மகிழ்ந்து, அவரது வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை பிரார்த்தித்து ஸ்லோகங்களைப் பாடினார். அந்த ஸ்லோகங்களே ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ ஆகும்.
ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்ரத்தை கேட்டு உள்ளம் மகிழ்ந்த மகாலட்சுமி அந்த பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்காய் மழையை பெய்ய வைத்தார். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய திருதியை நாளில் நடந்தது. இந்த சம்பவம் காலடியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அட்சதிருதியை தினத்தன்று திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அப்போது முப்பத்திரண்டு நம்பூதிரிகள் பத்தாயிரத்து எட்டு தடவை கனகதாரா ஸ்தோத்திரத்தை சொல்வார்கள்.
ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால், வறுமை நீங்கி செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.
குருவின் சந்திப்பு:
இளமை பிராயத்தில் சந்நியாசம் மேற்கொண்ட சங்கரர் காலடியிலிருந்து கிளம்பி நர்மதை ஆற்றை அடைந்த போது, கோவிந்த பகவத் பாதர் என்ற ஞானி ஆற்றாங்கரையில் சமாதி நிலை தியானத்தில் இருந்தார். அந்நேரத்தில், நர்மதை ஆற்றில் எதிர்பாராது பெருக்கெடுத்த வெள்ளத்தை தன் கமண்டலத்தைக் கொண்டு தடுத்து, சமாதி நிலையில் இருந்த கோவிந்த பகவத் பாதர் வெள்ளத்தில் அடித்து செல்லாதவாறு காத்தார். தன்னை காப்பாற்றிய சங்கரரை நோக்கி “நீ யார்” எனக் கேட்க, அதற்கு சங்கரர் அத்வைத தத்துவத்தில் செய்யுள் நடையில் சில சுலோகங்களில் நான் யார் என்பதை விளக்கியதை கேட்ட கோவிந்த பகவத் பாதர், சங்கரரை தன் சீடராக ஏற்றுக் கொண்டார். பின்பு கோவிந்த பகவத் பாதரின் சொல்லிற்கிணங்க சங்கரர், உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். பின்பு அத்வைத வேதாந்தத்தை இந்தியா முழுவதும் தானும், தனது சீடர்கள் மூலமும் பரப்பினார். இதைதவிர சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றினார்.
ஆதிசங்கரர் நிறுவிய மடங்கள்:
அத்வைத தத்துவத்தை மக்கள் அறிந்து கொள்வதற்காக ஆதிசங்கரர் இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்கள் நிறுவினார். அவருடைய நான்கு முக்கிய சீடர்களே இந்த நான்கு மடங்களின் முதல் பீடாதிபதி ஆனார்கள்.
வடக்குத் திசையில் பத்ரிநாத் என்ற இடத்தில் அதர்வண வேத ப்ரதானமாக ஜோதிர் பீடத்தை நிறுவி தோடகாச்சாரியாரை பீடாதிபதியாக நியமித்தார்.
கிழக்குத் திசையில் பூரி ஜெகந்நாத்தில் ரிக்வேத ப்ரதானமாக கோவர்த்தன பீடத்தை நிறுவி அதன் பீடாதிபதியாக பத்மபாதரை நியமித்தார்.
தெற்கு திசையில் சிருங்கேரியில் யஜுர் வேத ப்ரதானமாக சாரதா பீடத்தை நிறுவி சுரேஷ்வராச்சாரியாரை பீடாதிபதியாக்கினார்.
மேற்கு திசையில் துவாரகையில் சாமவேத ப்ரதானமாக ஒரு பீடத்தை நிறுவி ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாக நியமித்தார்.
மற்றும் காஞ்சீபுரத்தில் ஶ்ரீகாமாட்சி அம்மன் கோயிலை நிறுவி, இங்கு ஸ்ரீசக்ரபிரதிஷ்டை செய்து, வழிபாட்டு முறைகள் நடைபெற ஏற்பாடு செய்தார். இதை தொடர்ந்து ஸ்ரீகாமகோடி பீடத்தையும் நிறுவினார்.
நாமும் ஆதிசங்கரரை வணங்கி அவர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை சொல்லி ஸ்ரீ மஹாலட்சுமியின் அருளைப் பெறுவோம்.
ஆரூர். சுந்தரசேகர்.

Comments
Post a Comment