ஶ்ரீ இராமானுசரின் மூன்று திருமேனிகள்!!
ஶ்ரீ இராமானுசரின் மூன்று திருமேனிகள்!!
ஆதிசங்கரரின் அத்வைதம், மாத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆதிசங்கரர் மற்றும் மாத்வர் இருவர் வாழ்ந்த காலத்திற்கு இடையில் வாழ்ந்த ஶ்ரீஇராமானுஜரால் விசிஷ்டாத்வைதம் உபதேசிக்கப்பட்டது.
இராமானுஜர் வைணவத்தின் பெருமைகளை இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பரவச் செய்தார். மற்ற மதத்தாருடன் எதிர்வாதம் புரிந்து அவர்களை வைணவத்திற்கு வழிப்படுத்தினார். பல வைணவ மடங்களை நிறுவினார். சாதி பேதம் பாராமல், வைணவம் சார்ந்த ஆண், பெண் ஆகிய இருபாலரையும் தமிழ் பாசுரங்களை ஓதவும், வைணவ மதச்சின்னங்களை அணியவும் ஏற்பாடு செய்தார்.
ஶ்ரீஇராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் இல்லாமல் பெரிய நிர்வாகியாகவும் இருந்தார். ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை உருவாக்கினார்.
ஶ்ரீஇராமானுசரின் அவதாரம்:
கி.பி.1017-ல் பிங்கள ஆண்டு வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில், அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூரில் அசூரிகேசவசோமாயாஜுலு, காந்திமதி தம்பதியருக்கு மகனாக அவதரித்தார். இவர் ஆதிசேஷனின் மறு அவதாரம் என்பது ஐதீகம். இராமானுஜர் குழந்தைப் பருவத்திலேயே மிகவும் கூர்மையான அறிவுத் திறனுடன் விளங்கினார். அவருக்கு எட்டு வயதான போது அவருக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. இராமானுஜருக்கு அவர் தந்தையாரே முதலில் கல்வி அளித்தார். அவர் எதையும் ஒரு முறை படித்ததுமே புரிந்து கொள்ளும் ஆற்றலுடையவராக இருந்தார். அவருடைய தந்தையார் அவருக்கு பதினாறாம் வயதில் திருமணம் செய்து வைத்தார். அவருக்குத் திருமணம் நடந்த சில காலத்திற்குள்ளாகவே அவரின் தந்தை மரணமடைந்தார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் காஞ்சிபுரத்துக்குச் சென்றார்.
ஶ்ரீஇராமானுசரின் திருநாமங்கள்:
இராமனுஜரை யதிராஜர் என அழைத்தனர். யதி என்ற சொல் துறவி என்று பொருளுடையது. ராஜர் எனில் அரசன் யதிராஜர் எனில் துறவிகளில் தலைமைப் பண்புடையவர் என்பது பொருள்.
பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானங்களை எழுதி பாஷ்யம் அருளியதால் பாஷ்யக்காரர் என்று அழைக்கப்படுகிறார்.
ஶ்ரீவில்லிப்புத்தூர் கோயிலுக்கு இராமானுஜர் சென்றபோது, பக்தர்கள் அண்ணார் என்று அழைத்தனர்.
இராமானுஜர் பிட்சைக்குப் போகும்போது, ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிச் செல்வது வழக்கம். இதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்று திருவரங்கத்து மக்களால் அழைக்கப்பட்டார்.
திருக்கோஷ்டியூர் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி அனைவருக்கும் திருமந்திரத்தை அருளியதால், பக்தர்கள் பெருமாளாகவே அவரை பாவித்து எம்பெருமானார் என்றழைத்தனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் வழங்கியதால், அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த பெருமான் என்று அழைக்கப்பட்டார்.
ஶ்ரீரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற நிர்வாகம் செய்ததால் இராமானுசரை “உடையவர்” என்று போற்றி வணங்கினார்கள்.
ஶ்ரீஇராமானுசர் இயற்றிய நூல்கள்:
ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பாகும். (வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல்.)
வேதாந்த சங்கிரகம். (இது உபநிடத தத்துவங்களை விவரிக்கிறது).
வேதாந்த சாரம் மற்றும் வேதாந்த தீபம்: (இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சிறு உரைகள்.)
கீதா பாஷ்யம். (இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.)
நித்யக்கிரந்தங்கள். (அன்றாட வைதீகச் சடங்குகளும், பூசை முறைகளும்.) மற்றும் கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார்.
“ஓம் நமோ நாராயணாய” திருமந்திரம்
ஒருமுறை ஶ்ரீஇராமானுசர் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திர உபதேசம் பெறுவதற்கு, ஶ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூர் சென்றார். ஆனால் நம்பியோ, ராமானுஜருக்கு மந்திரத்தின் பொருள் கூற மறுத்ததால், ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை. பதினேழு முறை ராமானுஜரை அலைக்கழித்தபின், பதினெட்டாவது முறை அவர் வந்தபோது, அவரை மாணவராக ஏற்றுக் கொண்டு, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தின் உட்பொருளை ராமானுஜருக்கு உபதேசித்தார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். மந்திர உபதேசம் பெற்ற ஸ்ரீராமானுஜர், “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற பரந்த மனப்பான்மையில், குருவின் கருத்தை புறக்கணித்து, நேராக திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி “ஓம் நமோ நாராயணாய” என்ற உயரிய திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உரக்க கத்தினார். கோபுரத்தின் கீழே இருந்த எல்லா மக்களும் திருமந்திரத்தின் பொருளை கேட்டு ஸ்ரீராமானுஜரை வைகுண்ட பெருமாளாகவே நினைத்து வணங்கினார்கள்.
இந்தச் செய்தியினை கேள்விபட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, ஸ்ரீராமானுஜரை அழைத்து “நீ குருவின் உறுதிமொழியை மீறிவிட்டாய். உனக்கு நரகம்தான் கிட்டும்!” என்றார் கோபத்துடன். “குருவே, நான் ஒருவன் நரகம் சென்றாலும், இந்த ஊர் மக்களும் இதனை அறிபவர்கள் எல்லோரும் வைகுண்டம் போவார்கள் அல்லவா?” என்று பணிவுடன் கூறினார். இராமானுசருடைய கருணை உள்ளத்தைக் கண்டுகொண்ட நம்பிகள் அவரைப் பற்றி பெருமகிழ்ச்சியடைந்தார். பின்னர் இராமானுசரைத் தழுவிக்கொண்டு நல்லாசிகள் வழங்கினார்.
ஶ்ரீஇராமானுசரின் மூன்று திருமேனிகள்:
நூற்றி இருபது ஆண்டு காலம் வாழ்ந்த ஸ்ரீராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவரது காலத்திலேயே அவருக்கு அடியார்கள் கோவில் கட்டி வழிபட்டார்கள். அவை,
தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், )
தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)
தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)
தமர் உகந்த திருமேனி:
கர்நாடக மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் இத்திருமேனி நிறுவப்பட்டது. அங்கே ஸ்ரீராமானுஜர் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கி கைங்கர்யம் செய்தார்.
தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்ததும் இத்திருத்தலத்தில்தான். அவரது எண்பதாவது வயதில் தானே ஒரு சிற்பியைக் கொண்டு தம்மை உகந்தவர்களுக்காக அவரது சிலை வடிக்கப்பட்டது. ஸ்ரீராமானுஜர் கைகூப்பி அனைவரிடமும் விடைபெறும் கோலத்தில் அமைந்த இந்தச் சிலையில் தம் தெய்வீக சக்தியை ஏற்படுத்தி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். பின்பு திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் சென்றார். இந்தச் சிலையை “தமர் உகந்த திருமேனி” என்பர். இன்றும் மேல்கோட்டையில் இத்திருச்சிலை வழிபடப்படுகிறது.
தானுகந்த திருமேனி:
தமிழ் நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் நிறுவப்பட்டது. இராமானுஜர் தம் 120 ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் ஶ்ரீஇராமானுசரின் திருஉருவ சிலை வைக்க ஆசைப்பட்டார்கள். ஶ்ரீஇராமானுசரின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை செதுக்கினார்கள். அச்சிலையை அரவணைத்து, தனது தெய்வீக ஆற்றலை அந்தச் சிலைக்குள் செலுத்தினார். இதனால் அந்தச் சிலை “தாம் உகந்த திருமேனி” (இராமானுஜர் தாமே உகந்து அளித்த திருமேனி) என்று புகழ் பெற்றது. அந்தச் சிலை ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் நிறுவப்பட்டு தனிச்சந்நிதியில் வழிபடப்படுகிறது. இத்திருச்சிலையில் விலா எலும்பு, காது மடல் உள்ளிட்டவை 120 வயது இராமானுஜரின் தோற்றத்தினை தெளிவாகக் காட்டுகிறது.
தானான திருமேனி:
ஶ்ரீஇராமானுஜர் 120 ஆவது வயதில்(கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில் பத்மாசன நிலையில் அமர்ந்து, ஸ்ரீரங்கத்தில் பரமபத நிலை எய்தினார். அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சந்நதியாகும். இன்றும் நாம் அவருடைய பூத உடலை தரிசிக்கலாம். இவரின் திருமேனியில் தலைமுடி, கை நகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர். ஒவ்வொரு வருடமும் சித்திரை, ஐப்பசி மாதங்களில் பச்சை கற்பூரம் மற்றும் சில மூலிகைகள் அரைத்து அவரது திருமேனியில் பூசப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீராமானுஜர் திருமேனி பாதுகாக்கப் படுவதாக ஆன்மிகப் பெரியோர்கள் சொல்கின்றனர்.
பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜரை வணங்கி வழிபடுவோம்.
ஶ்ரீராமானுஜர் காயத்ரி
ஓம் ராமாநுஜாய வித்மஹே
ஸ்ரீ தாசரதாய தீமஹி
தன்னோ சேஷ ப்ரசோதயாத்
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.
ஆரூர். சுந்தரசேகர்.

Comments
Post a Comment