ஸ்ர்வநோய் நிவாரணி நாராயணீயமும் குருவாயூர் ஶ்ரீகிருஷ்ணரும்!!

ஆரூர் சுந்தரசேகர்.
இந்து மதத்தில் நிறைய தெய்வீக நூல்கள் உள்ளன. அதில் ஒரு புகழ்பெற்ற நூல் நாராயணீயம். இது குருவாயூரப்பன் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்திய பக்தி காவியம். இதனை எழுதியவர் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி ஆவார். இந்த நாராயணீயம், ஸ்லோகம் பாராயண பலனாக நமக்கு உடல் நலமும், நிலையான மகிழ்ச்சியையும் அளிக்கும் என ஸ்ரீ குருவாயூரப்பனை நேரில் பார்த்த பரவசத்தில் பட்டத்திரி உறுதியான முடிவுடன் எழுதி இருக்கிறார். நாராயணீயம் இன்றும் ஆயிரக்கணக்கான தென்னிந்திய இந்துக்களின் இல்லங்களில் தினந்தோறும் பக்தியுடன் பாராயணம் செய்யப்படும் நூல் ஆகும்.
ஸ்ரீமத் பாகவதத்தின் சாரம் தான் நாராயணீயம். ஸ்ரீமத் பாகவதம் என்பது வேத வியாசரால் இயற்றப்பட்டு, பின்னர் சுகர் என்ற முனிவரால் பரீக்ஷித் மஹாராஜாவிற்கு உபதேசித்தது ஆகும். இதில் 18000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இதனை மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி 1034 ஸ்லோகங்களுடன் 100 பிரிவுகளில் அதன் கருத்துகள் மற்றும் பொருள் மாறாமல் அழகிய கவிநயத்துடன் சுருக்கமாக அமைத்துள்ளார். ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவர் தன்னை நாடிவரும் பக்தர்களிடம் ஸ்ரீமந்நாராயணீயத்தைப் பாராயணம் செய்யும்படி அருளாசி வழங்குவது வழக்கம். இந்த நாராயணீயத்தை பாராயணம் செய்தால் நலமுண்டாகும் என்னும் நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
நாராயணீயம் உருவான வரலாறு:
சுமார் 460 வருடங்களுக்கு முன் (1560-ல்) கேரளாவில் உள்ள மேப்பத்தூர் எனும் மேல்புதூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் நாராயண பட்டத்திரி. இவர் கிருஷ்ணனின் மேல் பற்றற்ற பக்தியை கொண்ட மஹான் ஆவர். பதினாறாவது வயதிலேயே இறையருளால் அனைவரும் அதிசயக்கும்படி தலைசிறந்த சமஸ்கிருத பண்டிதராகத் திகழ்ந்தார். தனது குரு பிஷரோடி வாதநோயினால் அவதிப்படுவதைக் கண்ட இவர் “இறைவனிடம், குருவைப் பற்றியுள்ள நோய் அவரை விட்டு தன்னைப்பற்றிக் கொள்ளட்டும் என்று வேண்டிக்கொண்டார், உடனே, வாதநோய், பட்டத்திரியை பீடித்து, அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்யும் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவருக்கு பட்டத்திரி மீது மிகுந்த பாசம் உண்டு. அவர் மனம் நம் எஜமானர் இப்படி கஷ்டப்படுகிறாரே என்று வருத்தப்பட்டு நோய் நீங்குவதற்காக பிரபல மலையாள பண்டிதரான துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரை அணுகினார். அவர், பட்டத்திரியை குருவாயூர் கோயிலுக்கு அருகில் உள்ள நாராயண சரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராட சொல்லி, பின் புது வஸ்திரம் அணிவித்து ஜ்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழையும் இடத்தில் பகவானுக்கு வலது பக்கம் உள்ள திண்ணையில் அவரை உட்கார வைத்து, “மத்ஸ்யம் தொட்டுப் பாட சொல்” என்று கூறினார். எதுவும் புரியாமல் வேலைக்காரர் “உங்களை மீனை நாக்கில் வைத்து பாடச் சொல்கிறார்” என்றார். ஆனால், பட்டத்திரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது. உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, குருவாயூர் கிருஷ்ணரின் பெருமையைக் காவியமாக எழுத ஆரம்பித்தார். அந்தக் காவியமே “ஸ்ரீ நாராயணீயம்” ஆகும். இதில் மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. நாராயண பட்டத்திரி குருவாயூரப்பன் சந்நிதியில் தினமும் பத்து ஸ்லோகங்கள் வீதம் (ஒரு தசகம்) 100 தசகங்களில் ‘நாராயணீயத்தை’ பாடி முடித்தார். அவ்வாறு பாடி பூர்த்தி செய்து குருவாயூர் கிருஷ்ண பகவான் பாதத்தில் சமர்ப்பித்தது கார்த்திகை மாதம் 28ம் தேதி (டிசம்பர் 1587ம் வருடம்). 100-வது தசக பாடல்களில், குருவாயூரப்பனின் தலை முதல் கால் வரை (கேசாதி பாதம்) வர்ணித்துள்ளார். அப்போது குருவாயூரப்பனே அவருக்கு நேரில் வந்து தரிசனம் அளித்தார். அன்று பட்டத்திரியை பிடித்து இருந்த வாதநோய் முழுவதுமாக நீங்கியது.
குருவாயூர் கோவில்:
கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள பழமை வாய்நத கிருஷ்ணர் கோவில் ஆகும். , இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் பூலோக வைகுண்டமாகவும், பெருமைவாய்ந்ததாகவும் திகழ்கிறது.
இங்குள்ள குழந்தை ஸ்ரீ கிருஷ்ணனை, பக்தர்கள் அன்புடன் கண்ணன், உண்ணிக் கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள்.
நாம் குருவாயூர் கிருஷ்ணரை தரிசனம் செய்ய செல்லும்போது இடது பக்கம் உள்ள திண்ணையில் ஒரு செப்புப் பட்டயம் இருக்கிறது. அதில் மலையாளத்திலும், தமிழிலும், நாராயண பட்டத்திரி எழுதிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான் பட்டத்திரி நூறு நாட்கள் அமர்ந்து குருவாயூரப்பனின் பெருமையை, நாராயணீயம் என்ற புனித நூலை எழுதினார்.
குருவாயூரப்பன் கோயிலில் பிரதி வருடம் கார்த்திகை 28ம் தேதியன்று ‘நாராயணீயதினம்’ என்று தேவஸ்வம் சார்பில் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் ஆலயத்தில் பட்டத்திரி அமர்ந்து பாடிய இடத்தில் சிறப்பான கோலங்கள் இட்டு, விளக்கேற்றி, ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்வார்கள். நாராயணீயத்தைப் பற்றி விளக்க உரை, சொற்பொழிவுகள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முக்கியமாக நாள்பட்ட நோயினால் அவதிப்படுபவர்கள் ஆலயத்தில் கூடி குருவாயூரப்பனை தரிசனம் செய்து பலன் பெறுவார்கள் நாராயணீயம் படித்தாலோ, பாராயணம் செய்தாலோ, சிரவணம் செய்தாலோ ஐஸ்வர்யம் கூடும், கொடிய ரோகம் நிவர்த்தியடையும், கிரக பீடை நீங்கும். எனவே இந்த நூலை ஸ்ர்வநோய் நிவாரணி என்றே சொல்லலாம்.
“ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்”

Comments
Post a Comment