Posts

Showing posts from August, 2019

அம்மா... வரமாய் வந்த கடவுள்..

Image
அம்மா... வரமாய் வந்த கடவுள்.. அம்மா! அம்மா!! அம்மா!!! மூன்று எழுத்து கவிதை சொல்ல சொன்னால் நான் அம்மா என்பேன்! தமிழின் உயிர் முதலாகி, மெய் இடையாகி உயிர் மெய்  கடை ஆகி வரும் பெயர் கொண்ட  அற்புத பிறவி  “அம்மா”. என்ன ஒரு அருமையான உறவு.. வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. வெறுப்பை காட்டாத முகம்.. "அம்மா" அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு உயிர் என்றால் அது அம்மாதான்.. ஒவ்வொரு நாளும் நம்மை பற்றி கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள். நிம்மதி தேடிச்செல்லும் நாம் எவ்வளவு பணம் செலவு செய்தலும் கிடைக்காத ஒரு நிம்மதியான இடம் நம் அம்மா இருக்கும் இடம் மட்டும் தான். தவறுகளை சுட்டி காட்டி செம்மைப்படுத்தும் உன் அறிவுரைகள் ஆனால்   குற்றங்களையும் மன்னிக்கும் உனது இதயம். நீ அனைவரையும் அரவணைத்து அன்பு காட்டுவது ஒரு கலை அதுவே ஒரு கொடை. சோர்ந்து போகும் நேரங்களில் ஊன்றுக்கோலாய் நீ தருவாயே ஊற்சாகம்! வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் என் அம்மாவின் முகத்தை பார்த்ததும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்...

தோஷங்களை போக்கும் பிரதோஷம்!!

Image
தோஷங்களை போக்கும் பிரதோஷம்!! ஆரூர் சுந்தரசேகர்.    தோஷங்களை எல்லாம் போக்கும் நந்நாளே பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிவபெருமானையும், நந்திதேவரையும்  வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை.    சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதமாகும். பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டால் ஈசனின் பூரண அருள் கிடைக்கும். பிரதோஷ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். புராணத்தில் பிரதோஷம்:        தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றை திருமால், இந்திரன் முதலான தேவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதன்கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது.       இதைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கினர். சிவபெருமானிடம் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விஷத்தினை உண்டார். அவ்விஷம் சிவபெருமானின் வயிற்றினை அடை...

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதமுறையும் பலன்களும்!

Image
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதமுறையும் பலன்களும்! ஆரூர் சுந்தரசேகர்.                 காலம்காலமாக நமது கலாசாரம், பண்பாடு முதலியவை காக்கும் வகையில் பல பண்டிகைகள், விரதங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் நாம்  இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றோம். அந்த பண்டிகைகளில் ஒன்றுதான் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி.     ஸ்ரீ மகாவிஷ்ணு ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமி திதியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார்.       இந்தியாவின் பல பகுதிகளில் இந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, என்று பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஶ்ரீகிருஷ்ணர் அவதார வரலாறு: தேவகி - வாசுதேவர் தம்பதியருக்கு  எட்டாவது மகனாக ஸ்ரீகிருஷ்ணர் அவதாரம் எடுத்தார். பிறகு   கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்ந்து பிறகு துவாரகைய...

ஆடி மாத வெள்ளியும்... அம்மன் திருவிழாவும்...

Image
ஆடி மாத வெள்ளியும்... அம்மன் திருவிழாவும்... ஆரூர் சுந்தரசேகர்.         ஆடி மாத வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள்  மிகவும் சிறப்பு மிக்கவை. அதிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்புகள் பல  உள்ளன. ஆடி வெள்ளி கோடி நன்மை தரும் என்று மூத்தோர்கள் சொல்வர்.        சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.    இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே அழைக்கிறார்கள். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு ஒரு தனிப்பெருமை உண்டு.     இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளியன்று பெண்கள் விரதம் இருப்பது ஐதீகம். இதனை சுக்கிர வார விரதம் என்று கூறுவர். அம்மன் வழிபாடு: பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். கோயில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி...

அத்தி வரதர் தரிசனம் காண்போம்... அவர் அருளை பெறுவோம்.

Image
அத்தி வரதர் தரிசனம் காண்போம்...  அவர் அருளை பெறுவோம். ஆரூர் சுந்தரசேகர்.                   ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய மிகப் பழமையான வரலாறு கொண்டது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.         காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்குப் பல பெருமைகள் உண்டு. தமிழ்நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே எந்த ஒரு கோயிலிலும் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இந்த கோயிலில் உள்ளன. அப்படிப்பட்ட பழங்கால புராதன பெருமை வாய்ந்த இந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அத்திவரதரை தரிசனம் செய்ய நாம் நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.    பாரத்வாஜ ரிஷியின் அறிவுரைப்படி பிரகஸ்பதி வரதராஜப் பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால் இங்கு வந்து   வழிபட்டால் குரு பகவானால் நற்பலன்கள் கிடைக்கும்   என்பது ஐதீகம். ஒரு முக்கிய  விஷயம் என்னவென்றால் 24 ஏக்கர் பரப்பளவில் 24 நிலைகளைக் கொண்டுள்ள கோயிலில் மூலவர் வரதராஜரைப் தரிசனம்...

ஆடி பெருக்கின் மகிமை...

Image
ஆடி பெருக்கின் மகிமை... ஆரூர் சுந்தரசேகர். ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18 ஆம் நாள் தமிழ்நாட்டில் எல்லாவித  ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த பெயர் வந்தது.  ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கொண்டாடும் விழா இது மட்டும் தான். ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். ஆடிப்பட்டம் தேடிவிதை : ஆடி மாதத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். தென்மேற்கு பருவ மழை காரணமாக ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதைகளை விதைக்க ஆரம்பிப்பார்கள்.  ஆறு பெருக்கெடுத்து ஓடும் அன்று  ஆற்றின் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனால் தான்  ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழி வந்தது. ஆடிப்பெருக்கு விழா : ஆடிப்பெருக்கு அன்று மக்கள் ஆற்றங்கரைகளில் ஒன்று  கூடி ஆற்...

கோ பூஜை செய்வோம்... நற்பலன்களை பெறுவோம்..

Image
கோ பூஜை செய்வோம்... நற்பலன்களை பெறுவோம்... ஆரூர் சுந்தரசேகர்.     கோ என்றால் உலகம், உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தன் பாலை கொடுக்கும் தாய் போல் விளங்குவதால் பசுவை கோமாதா என்கிறோம்.       பகவான் பிரம்மா தனது  சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவை படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தார். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனையும், காலதேவனையும் முகத்தில் இருக்க செய்தார், மற்றவர்கள் உடல் எங்கும் குடியேற செய்தார். இதில் கங்கையும் மகாலட்சுமி இருவரும் தாமதமாக வந்தார்கள். இதனால்  மஹாலட்சுமிக்கும் கங்கைக்கும் பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை என்கிறது தேவிபாகவதம். கோமாதாவின் உடலில் இடம்பெற லட்சுமியும் கங்கையும் மிகவும் வேண்டினார்கள். எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்றனர். கோமாதாவும்  உடலிலிருந்து வரும் சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில் ...

பிரிட்டிஷ் கர்னலுக்கு நேரில் தரிசனம் தந்த சிவபெருமான்...

Image
பிரிட்டிஷ் கர்னலுக்கு நேரில் தரிசனம் தந்த சிவபெருமான்... ஆரூர் சுந்தரசேகர்.   குமரி முதல் இமயம்  வரை பல ஆலயங்களில் குடிகொண்டுள்ள  சிவபெருமானை பக்தியுடன் சரணடைந்து  அவர் அருளை பெற்றவர் பலர்.     பிரிட்டிஷ் கர்னல் ஒருவருக்கு சிவபெருமான் நேரில் வந்து  தரிசனம் தந்தது பற்றி மிக அற்புதமான நிகழ்வாக  யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான நடந்த போரை பிரிட்டிஷ் அதிகாரியான லெப்டினென்ட் கர்னல்  மார்ட்டின் அகர் மால்வா படைத் தலைமை ஏற்று நடத்தினார். போருக்கு சென்ற கர்னல் மார்ட்டின் அகர்  மால்வா தன் மனைவிக்கு தன் நலன்கள்  பற்றிய  கடிதங்கள் எழுதி அனுப்புவது வழக்கம். சில நாட்களாக கர்னலின்  மனைவி தனக்கு முன் போல்  கடிதம் வராததைக் கண்டு திகைத்து அச்சம் கொண்டாள். ஒரு நாள் வருத்தத்துடன் மத்திய பிரதேசத்தில்  அகர் என்ற நகரத்திலுள்ள உள்ள பைஜிநாத் மகாதேவ் கோவில் வழியாக  சென்று கொண்டிருந்த போது...

ஆடி மாதத்திற்கு அப்படி என்ன மவுசு ...

Image
ஆடி மாதத்திற்கு அப்படி என்ன மவுசு ... ஆரூர் சுந்தரசேகர். தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் மிக முக்கியமானதாகவும், ஆன்மீக  மாதமாகவும் ஆடி மாதம்  கருதப்படுகிறது.     ஆடி மாதத்தில் விரதங்கள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும்  ஈடுபட வேண்டியிருப்பதால் இறைவனை துதிப்பதற்கும், சிந்தனை செய்வதற்கும் ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் பண்டைக்காலம் தொட்டு தவிர்க்கப்பட்டு வருகிறது.   ஆடி மாத சிறப்பு:        'ஒரு வருடத்தின் மாதங்கள் இரு அயனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயனம் எனவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்திராயணம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாக இருப்பதாகவும்  ஜோதிட ...