பிரிட்டிஷ் கர்னலுக்கு நேரில் தரிசனம் தந்த சிவபெருமான்...

பிரிட்டிஷ் கர்னலுக்கு நேரில் தரிசனம் தந்த சிவபெருமான்...
ஆரூர் சுந்தரசேகர்.


  குமரி முதல் இமயம்  வரை பல ஆலயங்களில் குடிகொண்டுள்ள  சிவபெருமானை பக்தியுடன் சரணடைந்து  அவர் அருளை பெற்றவர் பலர்.
    பிரிட்டிஷ் கர்னல் ஒருவருக்கு சிவபெருமான் நேரில் வந்து  தரிசனம் தந்தது பற்றி மிக அற்புதமான நிகழ்வாக  யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான நடந்த போரை பிரிட்டிஷ் அதிகாரியான லெப்டினென்ட் கர்னல்  மார்ட்டின் அகர் மால்வா படைத் தலைமை ஏற்று நடத்தினார்.
போருக்கு சென்ற கர்னல் மார்ட்டின் அகர்  மால்வா தன் மனைவிக்கு தன் நலன்கள்  பற்றிய  கடிதங்கள் எழுதி அனுப்புவது வழக்கம். சில நாட்களாக கர்னலின்  மனைவி தனக்கு முன் போல்  கடிதம் வராததைக் கண்டு திகைத்து அச்சம் கொண்டாள். ஒரு நாள் வருத்தத்துடன் மத்திய பிரதேசத்தில்  அகர் என்ற நகரத்திலுள்ள உள்ள பைஜிநாத் மகாதேவ் கோவில் வழியாக  சென்று கொண்டிருந்த போது கோவிலின் உள்ளிருந்து மந்திரம் மற்றும்  சங்கொலியும் கேட்க அந்த கோவிலுக்குள் சென்றார். 
உள்ளே நுழைந்த கர்னல் மார்ட்டினின்  மனைவியை கண்ட சிவனுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் "ஏன் வருத்தத்துடன் இருக்கிறீர்கள்" என்று காரணத்தை கேட்ட பிறகு "சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு அருள் புரிபவர்" எனவும் தன்னை நம்பி வருபவர்களின்  துயரங்களில் இருந்து விடுவிப்பார் என்றும் கூறி கர்னல் மார்ட்டினின்  மனைவிக்கு "ஓம் நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் சொல்லி பிரார்த்தனை செய்யுமாறு கூறினார்.
  கர்னலின்   மனைவியும் தனது கணவன் எந்த ஆபத்துமின்றி நல்லபடியாக வீடு வந்து சேர்ந்த பிறகு பைஜிநாத்  சிவன்  கோவிலை புதுப்பித்துத் தருவதாக வேண்டி கொண்டார்.
வீட்டிற்கு வந்த கர்னலின் மனைவி ஓம் "நமசிவாய" அனுஷ்டான மந்திரத்தை தினமும் சொல்ல ஆரம்பித்தார். பதினோராவது  நாள் சொல்லிக்கொணடிருந்த போது  கர்னலிடம் பணிபுரியும் ஒருவர் ஒரு செய்தியைக் கொண்டு வந்தார். அதில் "உனக்கு தொடர்ந்து  கடிதம் எழுத முடியாததற்கு காரணம்    போர்க்களத்தில் இருந்த போது எதிரிகள் எங்களை தப்பிக்கமுடியாத அளவுக்கு சுற்றி வளைத்து சூழ்ந்துக் கொண்டனர். நாங்கள் நம்பிக்கை இழந்து போராடிக் கொண்டிருக்கும் போது ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன். அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் ஒன்று வைத்து இருந்தார், மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணம் இருந்தது  அவர் புலித்தோல் அணிந்து இருந்த விதமும், தனது கையில் வைத்திருந்த  அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகா விநோதமாக  இருந்தது,
இந்த துறவியை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய நாங்கள் மிகப்பெரிய  வெற்றியை பெற்றோம். அந்த அதிசயம் மிக்க  துறவி என்னிடம் வந்து கவலை கொள்ள வேண்டாம் என்றும் "உன் மனைவி என்னை தினமும்  பிரார்த்தனை செய்து கொண்டதற்காக உன்னை    காக்க வந்ததாகவும் கூறினார்"
  இந்த கடிதத்தை படித்த அடுத்த கணமே கர்னலின் மனைவிக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. அவரது மனம் குதூகலத்துடன் சிவபெருமானுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சில வாரங்களுக்கு பின் கர்னல் மார்ட்டின்  ஊர் திரும்பிய பின் நடந்தவற்றை விவரித்தார், பிறகு இருவரும்  பைஜிநாத் மகாதேவ் கோவிலுக்கு சென்றனர்.  அன்று முதல்  அவர்கள் சிவனின் தொண்டர்கள் ஆனார்கள். பிறகு கர்னலின் மனைவி தான் ஏற்கனவே வேண்டிக் கொண்டபடி ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடையாக  ரூபாய் 16000/= கொடுத்தார். இது அந்த காலத்தில் பெருந்தொகை ஆகும்.
    "1883 ஆம் ஆண்டு கர்னல் மற்றும் அவர் மனைவி 16000 ரூபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர்." என்ற செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷாரால் புதுப்பித்து கட்டப்பட்ட ஆலயம் இது ஒன்று மட்டும் தான்.
கர்னல் மனைவி ஐரோப்பா திரும்பும்போது தனது வீட்டிலேய சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து இறுதிவரை வழிபடபோவதாக கூறினார்.
சிவாய நம! என்று சொல்வோருக்கு  அபாயம் ஒரு நாளும் இல்லை.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...