ஆடி மாத வெள்ளியும்... அம்மன் திருவிழாவும்...
ஆடி மாத வெள்ளியும்... அம்மன் திருவிழாவும்...
ஆரூர் சுந்தரசேகர்.
ஆடி மாத வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. அதிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்புகள் பல உள்ளன. ஆடி வெள்ளி கோடி நன்மை தரும் என்று மூத்தோர்கள் சொல்வர்.
சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே அழைக்கிறார்கள். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு ஒரு தனிப்பெருமை உண்டு.
இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளியன்று பெண்கள் விரதம் இருப்பது ஐதீகம். இதனை சுக்கிர வார விரதம் என்று கூறுவர்.
அம்மன் வழிபாடு:
பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். கோயில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு கூழ் ஊற்றுவார்கள். சிலர் மாவிளக்கு போடுவார்கள் இந்த ஆடி மாதம் முழுவதும் அனைவரது வீடுகளிலும் பக்தி மணம் கமழும். குறிப்பாக பெண்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருப்பார்கள்.
.இத்தகைய ஆடி மாத வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்மன் வழிபடுபவர்களுக்கு கிரக தோஷங்களால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். . வீட்டில் திருமணம் ஆகாத நிலையில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு குழந்தை பிறக்கும். . கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். இந்த ஆடி வெள்ளிக்கிழமை விரதத்தை குறிப்பாக திருமணமான பெண்கள் மேற்கொள்வதால் அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாருக்கும் அனைத்து விதமான நன்மைகள் உண்டாகும்.
அம்மனுக்கு திருவிழா:
இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் பொங்கல் வைத்து வழிபடுதல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், தேர் இழுத்தல், பூச்சொரிதல், வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருதல், பால்குடம் எடுத்து ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தல், போன்றவை விமரிசையாக நடக்கும். இந்த மாத வெள்ளி க்கிழமை புற்றுக்கு பால் ஊற்றி சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள்.
இவ்வளவு பெருமை வாய்ந்த ஆடி வெள்ளி க்கிழமைகளில் நாம் அருகில் உள்ள அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று அம்மனுக்கு செவ்வரளி மாலை சாத்தியும், வெள்ளிக்கிழமை ராகுகாலம் துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றியும் வழிபடுவோம்.
ஆடி மாதத்தில் வெள்ளி க்கிழமை விரதத்தை மேற்கொண்டு கோடி நன்மைகளை பெறுவோம்.
ஓம் சக்தி பராசக்தி..ஓம் சக்தி பராசக்தி.
Comments
Post a Comment