அம்மா... வரமாய் வந்த கடவுள்..

அம்மா... வரமாய் வந்த கடவுள்..

அம்மா! அம்மா!! அம்மா!!!

மூன்று எழுத்து கவிதை சொல்ல சொன்னால் நான் அம்மா என்பேன்!

தமிழின் உயிர் முதலாகி, மெய் இடையாகி உயிர் மெய்  கடை ஆகி வரும் பெயர் கொண்ட  அற்புத பிறவி  “அம்மா”.

என்ன ஒரு அருமையான உறவு..

வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. வெறுப்பை காட்டாத முகம்.. "அம்மா"

அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு உயிர் என்றால் அது அம்மாதான்..

ஒவ்வொரு நாளும் நம்மை பற்றி கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள்.

நிம்மதி தேடிச்செல்லும் நாம் எவ்வளவு பணம் செலவு செய்தலும் கிடைக்காத ஒரு நிம்மதியான இடம் நம் அம்மா இருக்கும் இடம் மட்டும் தான்.

தவறுகளை சுட்டி காட்டி செம்மைப்படுத்தும் உன் அறிவுரைகள் ஆனால்   குற்றங்களையும் மன்னிக்கும் உனது இதயம்.

நீ அனைவரையும் அரவணைத்து அன்பு காட்டுவது ஒரு கலை அதுவே ஒரு கொடை.

சோர்ந்து போகும் நேரங்களில் ஊன்றுக்கோலாய் நீ தருவாயே ஊற்சாகம்!

வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் என் அம்மாவின் முகத்தை பார்த்ததும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்து விடுகிறது.

சமைக்கும் அனைத்து உணவிலும் அன்பையும் சேர்த்து அதன் சுவையை                   அதிகரிப்பவள் நீதானே அம்மா...

எனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு தெரியுமோ இல்லையோ என் அன்னை தெரிந்து வைத்து இருப்பாள்!

ஆயிரம் விடுமுறை வந்தாலும் உனது
அலுவலகத்திற்கு  (சமையலறை) மட்டும்   விடுமுறையில்லை.

வந்தாரை இன்முகம் கொண்டு வருக என் வரவேற்பதில்  வள்ளல்தெய்வம் நீ...

வயதான பிறகும் நம்மையே நினைப்பாள்
எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வாள்...

வாழ்க்கையில் தியாகம் செய்பவர் தந்தை.. வாழ்க்கையையே தியாகம் செய்பவள் தான் தாய்..!!

இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில் நான் உனக்கு மட்டுமே பிள்ளையாக பிறப்பேனம்மா...

காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே...! அவளை என்றும்
மனதில் சுமப்போம்...

தாய் என்றாலும் அம்மாதான் ஆனால் நீவிர் இரண்டும் சேர்ந்த கலவை தாயம்மாள் அல்லவா!

உன் அன்பிற்கு அன்றும் இன்றும்,என்றும் நீ மட்டுமே; உனக்கு யாருமே ஈடாகாது.

நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இறைவன் இருக்கிறான் அம்மாவின் வடிவில்.

இனிய என்பதாவது பிறந்த நாள் (22.08.2019) நமஸ்காரங்களுடன்
தாயே நீண்ட ஆயுளோடும்,  நல்லசுகத்தோடும், மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும், தீர்க்க சுமங்கலியாக எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்.

அன்புடன்,
சு.சேகர் என்கிற
ஆரூர் சுந்தரசேகர்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...