விபூதியை அணிவோம்...அதன் பலனை பெறுவோம்...
விபூதியை அணிவோம்...அதன் பலனை பெறுவோம்... ஆரூர் சுந்தரசேகர். விபூதி இந்துக்கள் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐஸ்வர்யம் என்று அழைக்கப்படும். "நீறில்லா நெற்றி பாழ்!" என்கிறார் அவ்வையார். விபூதிக்கு திருநீறு என்று ஒரு பெயருண்டு. "மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே" திருநீறு இட்டுக் கொள்ளும் பெருமையை திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தில் பதினோரு பாடல்களில் பாடியுள்ளார் மேனியெங்கும் பால் வெண்ணீறைப் பூசியிருப்பதாக சிவனை தேவாரம் போற்றுகிறது. "பூதி அணிவது சாதனம் ஆதியில் காதணி தாமிர குண்டலம் கண்டிகை ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம் தீதில் சிவயோகி சாதனம் தேரிலே." என்கிறார் திருமூலர். இப்பாடல் சிவனடியார்கள் அணிய வேண்டிய முக்கிய சிவ சின்னங்கள் மூன்று அதில் திருநீறு முதலாவதும் இரண்டாவதாக செம்பிலான குண்டலத்தை காதிலும் உருத்திராக்க மாலையை கழுத்திலும் அணிய வேண்டும் என கூறியுள்ளார். “பூசுவத...