தீர்க்க சுமங்கலி பவா" என்பதின் மகத்துவம்
தீர்க்க சுமங்கலி பவா" என்பதின் மகத்துவம் ஆரூர் சுந்தரசேகர். பெண்களை தீர்க்க சுமங்கலி பவா என்று ஆசீர்வதிப்பதை நாம் பார்த்திருக்கிறோம் அதனுடைய மகத்துவம் என்ன என்பதை பார்ப்போம்.... தீர்க்க சுமங்கலி பவா என்ற ஆசீர்வாதத்திற்கு மனைவி கணவனிடம் 5 முறை திருமாங்கல்யம் பெற வேண்டும் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள். அவை பின்வருமாறு.... முதலாவது திருமணத்தன்று இரண்டாவது ஷஷ்டியப்தபூர்த்தில் (60 வயது) மூன்றாவது பீமரத சாந்தியில் (70 வயது) நான்காவது சதாபிஷேகத்தில் (80 வயது) ஐந்தாவது கனகாபிஷேகத்தில் *திருமணம் முதல் திருமாங்கல்யம் திருமணத்தின் போது உற்றார் உறவினர் ஆசியுடன் கழுத்தில் ஏறுகிறது. வாழ்க்கையின் முதல் பிணைப்பின் சாட்சியாகிறது மாங்கல்யம். ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. *ஷஷ்டியப்த பூர்த்தி (60 வயது): சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொர...