தீராத கடன் பிரச்சனைகள் தீர...

தீராத கடன் பிரச்சனைகள் தீர....

ஆரூர் சுந்தரசேகர்.

    தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

   சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ காலத்திலும், சுவாதி நட்சத்திரத்திலும்  பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளசி மாலை சாத்தியும் வழிபடலாம்.

லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரம்:

“ஓம் வ்ஜரநகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்"

   கடன் தொல்லைகளுக்கு செவ்வாய் கிரகஹமே காரணம் ஆதலால் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் சன்னதியில் மாலை வேளைகளில் ‘ஓம் சரவணபவாய நம’ என்று சொல்லி கொண்டு 12 முறை பிரதட்சணம் செய்து நெய் தீபமேற்றி வழிபடலாம்.

முக்கியமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்து வந்தால் கடன்கள் தீர வழி வகைகள் பிறக்கும்.

வாங்கிய கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது. முக்கியமாக செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்கக் கூடாது.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...