திருமணம், மக்கட் பேறு அருளும் பச்சையம்மன்!! ஆரூர் சுந்தரசேகர்.
திருமணம், மக்கட் பேறு அருளும் பச்சையம்மன்!! ஆரூர் சுந்தரசேகர். இயற்கை என்றவுடன் நம் நினைவுக்க வருவது பச்சை நிறம். பச்சை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி, மனதிற்கு வலிமை. திருவண்ணாமலை மாவட்டம் தசெய்யாறு தாலுகாவில் செய்யாறு, கமண்டலநதி, பிரம்பகநதி என மூன்றும் ஒன்றுசேரும் வாழைப்பந்தல் எனும் ஊரை அடுத்த முனுகப்பட்டு எனும் பசுமையான கிராமத்தில் பச்சைநிறத்தில் கம்பீரமான தோற்றத்துடன் அமர்ந்த நிலையில் மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கிறார். பச்சை நிறமுடைய இவரை ‘பச்சையம்மன்’ என்றே அழைக்கின்றனர். இங்கு அன்னை பார்வதி வாழைப்பந்தல் அமைத்து தவம் செய்ய, சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வ கோயிலாக திகழ்கின்றது. பல இடங்களில் கோயில் கொண்டுள்ள பச்சையம்மனுக்கெல்லாம் வாழைப்பந்தலில் குடி் கொண்டுள்ள பச்சையம்மனே முதன்மையானவர். ஸ்தல புராணம் : ஒரு சமயம், பார்வதிதேவி, சிவபெருமானின் உடலில் சரி பாதி (இடபாகம்) பிடிக்க வேண்டும் என வைராக்கியம் கொண்டு, அன்னை சிவனைப் பிரிந்து பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தை தேடி காஞ்சியிலிருந்து புறப்பட்டு...