மகான் ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர்.
மகான் ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர். ஆரூர். சுந்தரசேகர். மகான்களும், சித்தர்களும் பெருகித் தழைத்தது நம் பாரதம். அவர்கள் அவதரித்து தவசீலர்களாக விளங்கி, மக்களை ஆன்மீக வழியில் நடத்திய மகாபுருஷர்கள் ஆவார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, ஜீவ சமாதியான போதும் அவர்களின் செயல்கள் மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், நல்வழி படுத்துவதிலும் இருந்தது. அத்தகைய மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் அதிஷ்டானங்களையும் தரிசிப்பது சகல நன்மைகளையும் நமக்கு தரும். திருவண்ணாமலை, சித்தர்கள், மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி ஆகும். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த முதல் மகான் என்று கூறுகின்றார்கள். திருவண்ணாமலையின் ஈசான்ய மூலையில் இருந்து மக்களுக்கு அருள் செய்ததால், ஈசான்ய ஞானதேசிகர் என்றும் அழைக்கப்பட்டார். மகான் அவதாரம்: பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்ற ஊரில் வாழ்ந்த திருநீலகண்டர்,உமைய பார்வதி தம்பதியினருக்கு இவர் மகனாக 1750ம் ஆண்டில் அண்ணாமலையார் அருளால் அவதரித்தார். இவ...