மகான் ஸ்ரீ குழந்தையானந்தர் ஸ்வாமிகள்
மகான் ஸ்ரீ குழந்தையானந்தர் ஸ்வாமிகள் ஆரூர். சுந்தரசேகர். மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; மகான்களின் வாழ்க்கை எல்லாம் அற்புதங்கள் நிறைந்தது. பூமியில் பிறப்பவர்கள் மனிதர்களாக இருந்தால் ஒரே முறை தான் இறந்து போவார்கள். அதுபோல, மகான்களாக இருந்தாலும் ஒரே முறைதான் சமாதி அடைவார்கள் . மகான்களுக்குள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ஸ்ரீ குழந்தையானந்தர் சுவாமிகள். ஒவ்வொரு முறை சமாதி அடைந்த பிறகும் மற்றொரு இடத்தில் தோன்றி அற்புதங்கள் புரிந்தவர். இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்து விஜயதசமியன்று தனது நான்காவது சமாதி நிலையை அடைந்தார். இவர் சுமார் 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர். மதுரை மீனாட்சி அம்மன் வளர்த்த மகான்: மதுரையை அடுத்த சமயநல்லூரில் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி தம்பதியினர். ஸ்ரீவித்யா உபாசகர்கள். இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கி...