தை பொங்கல் பொங்கட்டும்... வாழ்வில் மங்கலம் பெறுகட்டும்...
தை பொங்கல் பொங்கட்டும்... வாழ்வில் மங்கலம் பெறுகட்டும்... ஆரூர் சுந்தரசேகர். “தை பொறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழிக்கேற்ப தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை மாதம். இந்த மாதத்தின் பிறப்பை பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தைமாதம் கொண்டாடப்படுவதால்' தைத் திருநாள்' என்றும் அழைக்கிறோம். தமிழர்கள் மிக விமரிசையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விதமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களால் குதூகலமாக கொண்டாடப்படும் பொங்கல் என்பதை வெறும் பண்டிகையாக மட்டும் பார்ப்பதில்லை. தமிழ் பண்பாட்டின் அடையாளமாகவும், உறவுகளின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள வழிவகை செய்யும் பெருவிழாவாகவும் பார்க்கின்றனர். இதனால் தான் மற்ற பண்டிகைகளை காட்டிலும் பொங்கலை மட்டும் ஊருடனும், உறவுகளுடனும் இணைந்து கொண்டாட வேண்டும் என நினைக்கின்றனர். தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை, வட மாநிலங்களில் சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காரணத்தால் இந்தியாவின் ப...