நவக்கிரக வழிபாடும் நற்பலன்களும்...
நவக்கிரக வழிபாடும் நற்பலன்களும்... ஆரூர் சுந்தரசேகர். மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நவகிரகங்களின் ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் நடைபெறுகிறது. நவகிரகங்களாகிய சூரியன்,சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்கள் மனித இனத்துடனும் பூமியுடனும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவைகளை நாம் நவகிரகங்கள் அல்லது நவ கோள்கள் என்று கூறுகிறோம். (நவ என்றால் ஒன்பது என்று பொருள்). மனித வாழ்வில் பெரும் பங்கு பெறுவது இந்த நவ கிரகங்கள். கிரகங்கள் விண்ணில் இருந்து தனக்கென குறிப்பிடப்பட்டுள்ள பாதையில் காலம் தவறாமல் சஞ்சரிக்கின்றன. இவைகளின் சஞ்சாரத்தால் சீதோஷ்ண நிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இந்த சீதோஷ்ண மாறுதல்களினால் பருவ நிலை மாற்றங்கள் உண்டாகின்றன. நவக்கிரகங்களின் தன்மைகளும், காயத்ரியும்: கிரகம் 1: சூரியன் (ஞாயிறு) நவகிரகங்களில் முதன்மையானது சூரியன். கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. அக்னி இவருக்கு அதி தேவதை. மாணிக்கம் உகந்த ரத்தினம்...