நவராத்திரியின் பெருமையை தெரிந்துகொள்வோம்!!
நவராத்திரியின் பெருமையை தெரிந்துகொள்வோம்!! ஆரூர். சுந்தரசேகர். சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரிகள் நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல் வாழ்வையும் அருளச் செய்யும் சக்தியை வழிபடும் காலமாக நவராத்திரி அமைந்துள்ளது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள். நவராத்திரி வந்தது எப்படி: ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க வேண்டும் என்ற, தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் முடிவு செய்து ஒரு அற்புதமான பெண் உருவத்தை சிருஷ்டித்தார்கள். அந்த பெண் தெய்வமான துர்க்கை, ஆக்ரோஷமான முகத்த...