அன்னையர் தினத்தை நாம் தினந்தோறும் கொண்டாடுவோம்...
அன்னையர் தினத்தை நாம் தினந்தோறும் கொண்டாடுவோம்... ஆரூர் சுந்தரசேகர். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்பது பழமொழி. தாயை தெய்வமாக மதிப்பவனுக்கு அனைத்து தெய்வங்களும் அருள் புரிவார்கள். கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்கு மெய் (உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்த பின்பு அதை உலகத்தில் உயிர்மெய்யாய் குழந்தையை பெற்றெடுக்கிறாள். இதை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் சேர்ந்து உருவானது 'அம்மா' என்ற தமிழ் சொல். வேறு எந்த மொழியிலும் இதை போன்ற வார்த்தைகள் இல்லை. ‘அம்மா’ என்ற வார்த்தைக்கு ஜாதி, மத, மொழி, இன, நாடு, பண பேதம் பார்க்கவே முடியாது.. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. உலகில் ஒருவருக்கு விலை உயர்ந்ததாகத் தோன்றும் ஒரு விஷயம் மற்றொருவருக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றும். அதற்கு அவரவர் எண்ணங்களும் வாழும் சூழ்நிலையே காரணமாக இருக்கலாம் ஆனால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் மதிப்பிட முடியாத ஒரு விஷயம் “அம்மாவின் அன்பு” இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உ...