தங்க மீன் தந்த அதிபத்த நாயனார்!!ஆரூர் சுந்தர சேகர்.
தங்க மீன் தந்த அதிபத்த நாயனார்!!
ஆரூர் சுந்தர சேகர்.
இறைவனின் அருள் கிடைக்க படிப்போ, விரதமோ, பொருளோ தேவையில்லை.. தூய்மையான மனமும், இறை நம்பிக்கையும் இருந்தால் போதும் என அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. இவர் எந்தவிதமான படிப்பும் படித்தவரில்லை, கோயில் கோயிலாக சுற்றி வந்தவரும் இல்லை, எப்பொழுதும் பூஜை, புனஸ்காரம் என்று இருந்தவரும் இல்லை, அது குறித்து அறிந்திருக்கும் குலத்திலேயும் பிறக்கவில்லை.
நாகை கடற்கரையில் உள்ள நுளைப்பாடி என்று அழைக்கப்பட்ட நம்பியார் நகர் குப்பத்தில், பரதகுலத்தினராய் வலைத்தொழில் மரபில் தோன்றியவரே அதிபத்த நாயனார்.
ஒவ்வொருத்தருக்கு பக்தியை வெளிப்படுத்த ஒவ்வொரு விதமான நியதி இருக்கும்.
இவருக்கு சிவன் மீதுள்ள பக்தியால், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு நாளும் மீன் பிடித்து கரையேறியவுடன், முதல் மீனை சிவனை நினைத்து கடலில் விடுவது வழக்கம்.
வலையில் சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும், அதனைச் சிவபெருமானுக்கு என்றே அவர் கடலில் விட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவார். எக்காரணம் கொண்டும் இந்த கொள்கையை அவர் ஒரு நாளும் கைவிட்டதில்லை.
சிவபெருமான் மேல் கொண்ட பக்தியின் காரணமாக, தன்னால் இயன்ற இந்த செயலை சிவத் தொண்டாக புரிந்து வந்தார்.
அதிபத்தரின் இறைபக்தியை உலகறியச் செய்யும் விதமாய் சிவபெருமான் ஒரு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி, மெல்ல மெல்ல அதிபத்தர் வீசும் வலையில் மீன்கள் சிக்குவது குறைந்தது. இதனால், அதிபத்தரின் குடும்பம் வறுமையில் வீழ ஆரம்பித்தது. சிவபக்தியில் மட்டும் அதிபத்தருக்கு சிறிதளவும் பக்தி குறையவில்லை.
அதிபத்தர் ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்றார். அன்று ஒரு மீனும் கிடைக்கவில்லை. கடைசியில் வலையில் ஒரே ஒரு மீன் சிக்கியது, வலையில் சிக்கியது விலை மதிப்பற்ற ஒரு தங்க மீன். அந்த தங்க மீன் தக தக வென மின்னியது, அவருடன் மீன் பிடிக்க வந்தவர்கள் உன்னுடைய கஷ்டத்திற்கு விடிவு காலம் வந்து விட்டது என்று கூறினார்கள். அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்காமல், சிவபெருமானுக்கு அளிக்க தங்க மீன் கிடைத்ததே என்ற மட்டில்லா மகிழ்ச்சியோடு சிவனை நினைத்தவாறு வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற அந்த ஒரே ஒரு தங்க மீனையும் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்காக கடலிலேயே விட்டு விட்டு திரும்ப முனைந்தார். அவருடைய உயர்ந்த தூய பக்தியை மெச்சி சிவபெருமான் பார்வதி சமேதராக அதிபத்தருக்கு அப்பொழுது “ரிஷபாரூடராக” காட்சியருளினார். பின்பு, செய்யும் தொண்டில் இருந்து சிறிதும் பிறழாது வாழ்ந்த அதிபத்தருக்கு முக்தி கொடுத்தார்.
இந்த அதிபத்த நாயனாரை “விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்’’ என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதியுள்ளார். அதிபத்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருள். அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு தங்க மீனை அர்ப்பணித்த நிகழ்வினை நினைவுகூர்வதற்காக தங்க மீன் அர்ப்பணிக்கும் விழா இன்றும் நாகப்பட்டினத்தில், காயாரோகண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
காயாரோகணேஸ்வரர் கோயில்:
சிவபெருமான் அதிபத்தருக்கு அருள்பாலித்த திருத்தலம்தான் காயாரோகணேஸ்வரர் கோயில். இத்திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அதிபத்தருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது.
இந்த கோயிலில் சிவனருளால் முக்தி பெற்ற மீனவ குலத்தைச் சேர்ந்த அதி பத்தருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் மீனவர்கள் யாராவது இறந்துவிட்டால், அவர்களுக்கு சிவன் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அப்போது சிவன் சன்னதியை அடைக்காமல், கோயிலுக்கு முன்பாக இறந்தவரின் உடலை, வைத்து, சிவனுக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவரின் உடலுக்கு அணிவிக்கின்றனர்.
தங்க மீன் அர்ப்பணிக்கும் விழா:
ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் திருவிழா, நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோயிலில் நடைபெறுகிறது. அத்திருவிழாவில் அதிபத்தரின் உற்சவ சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருள செய்து, கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். மீனவர்கள் வலைவீசுவது போலவும், வலையில் தங்கமீன் கிடைப்பது போலவும், அதை அதிபத்தர் இறைவனுக்கு அர்ப்பணிப்பது போல இறைவன் அதிபத்தருக்கு முக்தி அளிக்க கடற்கரையில் எழுந்தருளி அனைவருக்கும் அருள்புரிகிறார். அன்று அதிபத்தருக்கு குருபூஜை விழாவும் நடக்கிறது.
இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனிடம் நியதி தவறாத பக்தி கொண்டவராக அதிபத்தர் இருந்ததால், அவரை நாயன்மார்களில் ஒருவராக போற்றுகின்றார்கள்.
“திருச்சிற்றம்பலம்..”

Comments
Post a Comment