சென்னையிலேயே - "அறுபடை வீடு முருகனை தரிசனம் செய்வோம்"!!
சென்னையிலேயே - "அறுபடை வீடு முருகனை தரிசனம் செய்வோம்"!! - ஆரூர். சுந்தரசேகர். தமிழகத்தின் தென் பகுதியில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்ச்சோலை தமிழகத்தின் மத்திய பகுதியில் சுவாமி மலை, தமிழகத்தின் வட பகுதியில் திருத்தணி என்பன முருகனின் ஆறுபடை வீடுகளாகப் புகழப் பெறுகின்றன. இவற்றில் திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - சுவாதிட்டானம், பழனி - மணிபூரகம், சுவாமிமலை - அநாகதம், திருத்தணி - விசுத்தி, பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை என உடற் சக்கரங்கங்களை குறிப்பதாக ஐதீகம். முருகப்பெருமானுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு. சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் ஆறு. ‘முருகா’ என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும். திருப்பரங்குன்றம்... இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனை வழிபட்டால் திருமணம் நடைபெறும். திருச்செந்தூர்... சூரபத்மனைப் போரில் வென்ற இடமாகும். நாழிக்கிணறு ...