தைப்பூசத்திருநாள்...
தைப்பூசத் திருநாள் ஆரூர் சுந்தரசேகர். இருபத்தேழு நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய புண்ணிய நாள் தைப்பூசத் திருவிழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.தைப்பூசத்தன்று முருக பக்தர்கள், ஆறுபடை வீடுகளில் ஏதேனும் ஒரு முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நார்வே என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. "'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே'' என்று தைப்பூசத் திருநாளன்று நீராடுவது பற்றி அப்பர் பாடியுள்ளார். "மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான் நெய்ப்பூசு மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும...