பயத்தை போக்கும் பைரவர் வழிபாடு !!
பயத்தை போக்கும் பைரவர் வழிபாடு !! ஆரூர். சுந்தரசேகர். பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவம் பைரவர் வடிவமாகும். இவர் வைரவர் என்றும் அழைக்கப்படுகிறார். பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சன்னிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. காலையில் கோயில் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று “பார்த்த நித்ய பூஜா விதி” கூறுகிறது. கோயிலின் மற்ற சன்னதிகளை பூட்டி சாவியை பைரவர் பாதங்களில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. பாதுகாப்பற்ற இந்நாளில் சில கோவ...