என்றும் முன் மாதிரியாக..... என் அப்பா

அப்பா...
அப்பா உன்னால் வந்தேன் இவ்வுலகிற்கு
உன் வயிற்றில்  சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம்  சுமந்தாய்  உன் நெஞ்சினில்..
என் உடலில் நீயும் இருக்கின்றாய் ஒரு பங்காய்
நீ உணர்த்திய நேர்மையில் நடைபயில
என் வாழ்வை வழி நடத்துகின்றாய் ஒரு குருவாய்
ஓய்வில்லா உழைப்பு மட்டும் உன்னிடம்
அதில் அடைந்த பலன்கள் அனைத்தும் எங்களிடம்.
தன்னலமில்லா உள்ளத்தின் பெயர் தான் தந்தையோ!
நீங்கள்  மட்டுமே சம்பாதித்த வேளையில்
உங்களுடைய மனைவி மற்றும் ஒன்பது  குழந்தைகளின
சந்தோசத்திற்காக உங்கள் சந்தோசத்தை இழந்தவர் நீர்!
உன் கண்டிப்பு இல்லையெனில் நங்கூரம் இல்லா மரக்கலமாய் பாறையில் தூளாயிருப்போம்.
நான் சோர்ந்து அல்லது தோல்வியில் விழும் பொழுது
தோள் கொடுக்கும்தோழன் நீயல்லவா...
உன்னால் தானய்யா எமக்கு அங்கீகாரம்
எல்லா நலங்களும் தந்தவனே
எங்கள் வாழ்க்கை பிரகாசமாய் இருக்க
உங்களை மெழுகு போல் உருக்கிகொண்டவர் நீர்!
தனக்கென எதையும் சேர்த்து வைக்காமல் எல்லாவற்றையும்
எங்களுக்கு என செலவழித்து  சுருக்கமாக சொன்னால்
தன்னை உருக்கி - எங்களை உருவாக்கினாய்...
ஆக,அவர் கணக்கில் நாங்கள் தான் அவரின் பிரதான சொத்து
என்னுடைய முதல் எடுத்துக்காட்டு நீங்கள் தான் !
ஆசைகளை துறந்தவன் தான் மகான் எனில்
என் தந்தையும் ஒரு மகான் தான் !
உங்களை என் அப்பா என்று சொல்ல பெருமைப்படுகிறேன்
ஷீர்டி சாய்பாபா வணங்கும் உனக்கு எந்த குறையும் இல்லை
உன்னைப்போற்ற ஓர் நாள் மட்டும் போதுமா...
அனுதினமும் போற்றப்படவேண்டும
                                      
                                      ஆரூர் சுந்தரசேகர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...