உண்மை பக்தி எது ?
உண்மை பக்தி எது ?
இறைவன் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் எட்டு திசைகளிலும் இருக்கிறார். பூமி முதல் ஆகாயம் வரை வியாபித்திருக்கிறார்.
மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்தால் போதும்.
இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல் வாழ்ந்து வந்தால் போதும்.
அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருந்தால் போதும்.
இறைவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, வாழ்ந்தால் போதும்.
இறைவனை மனதார சில மணிதுளிகள் ஆத்மார்த்தமான நினைத்து " இறைவா, என்னை இதுவரையில் வழிநடத்திச் சென்றதிற்கு நன்றி, இனியும் எந்தவித குறையும் இல்லாமல் மனநிம்மதியுடன்வாழ வழி வகுத்தது தர வேண்டும்" என எந்த விதமான சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, , சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரிவர செய்தாலே போதும்.
மேற்கண்டவாறு நடந்து கொண்டாலே இறைவனை நாம் நெருங்கி விட்டோம் என்று அர்த்தம்.
தொகுப்பு: ஆரூர் சுந்தரசேகர்.
(சு.சேகர் தாம்பரம்)
Good start!! Expecting much more!!
ReplyDeleteநன்றி, வளர்க ஆன்மீகம் ...
DeleteNice
ReplyDeleteNice
ReplyDeleteNice
ReplyDeleteVery nice
ReplyDelete