ஸ்ரீ சாயி பாபா மகா சமாதி 100-வது ஆண்டு ( 2018)

ஸ்ரீ சாயி பாபா மகா சமாதி 100-வது ஆண்டு ( 2018)

சீரடியில்  கோவில்  கொண்டு உலகெங்கிலும் தமது அருள் மழையால் அடியவர்கள் அனைவரையும் வாழவைத்த ஸ்ரீ சாயிபாபா 1918 ஆம் ஆண்டு மகா சமாதி ஆனார். 

இந்த வருடம் 2018 விஜயதசமி திருநாள் முதல், ஸ்ரீசாயிபாபா மகா சமாதி  அடைந்து 100-வது ஆண்டு தொடங்குகிறது.

சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து விட்டார் என்று கூறப்பட்டாலும், இன்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார். நம்மை காத்து நல்வழிபடுத்துகிறார். அவர் மீது மாறாத நம்பிக்கையும் அன்பும், பக்தியும் கொண்ட வர்கள் அவரது தரிசனத்தைப் பெற்றுள்ளனர். நிறைய பேரிடம் அசரீரியாக பேசியுள்ளார். லட்சக்கணக்கான பக்தர்கள் என்ன வேண்டுகிறார்களோ... அதையெல்லாம் நிறை வேற்றி கண்கண்ட தெய்வ மாக அவர் திகழ்கிறார் தன் பக்தனை அவர் ஒரு போதும் கைவிட்டதே இல்லை. 

      சீரடியில்  இருந்த காலம் முழுவதும் எண்ணற்ற பல அற்புதங்கள்  நிகழ்த்திய சாயிபாபா ,  ‘நான் என்னுடைய பூத உடலைத் துறந்து சமாதி சென்றாலும், இப்போது போலவே எப்போதும் உயிருடன்  இருப்பேன்; என்னைச் சரணடையும் பக்தர்களின் வாழ்க்கையில் அளவற்ற சந்தோஷத்தையும், நிம்மதியையும் தருவேன்’ என்று பக்தர்களுக்கு உறுதியளித்தார். அதற்கேற்ப  இன்றைக்கும் அவர்கள்  அற்புதங்கள் தொடர்கிறது..

சீரடி  செல்லும் பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

நமது இந்திய நாட்டில் மகாராஷ்டிர மாநிலம்  அகமதுநகர் மாவட்டத்தில் ரகதா வட்டதைச் சேர்ந்த சீரடி நகரப் பஞ்சாயத்து எல்லைக்குள் அமைந்த பகுதியாகும். இது அகமதுநகர் - மன்மாட் மாநில நெடுஞ்சாலையில் அகமத்நகரிலிருந்து83 கிமீ தொலைவில் உள்ளது.. மும்பை, புனே போன்ற நகரங்களிலிருந்து நாளும் பல சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல தங்குவிடுதிகளும் ஆன்மிக ஓய்வகங்களும் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பிற பெருநகரங்களுடன் இரயில்  இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.

  சாய் பாபா கோயிலை இப்பொழுது  திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கி இருக்கிறார்கள். கோவிலுக்கு  நாலு நுழைவாசல்கள் இருக்கிறது

    சாய்பாபா சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு நின்றாலும் பாபா உங்களைப் பார்ப்பது போலவே இருக்கும்.

   மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான வெள்ளிக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம். இந்த சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது. 
  

சீரடி ஆலயத்தை மிக, மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.
   
   பக்தர்கள் உதி அக்னியில் போட தேங்காய் வாங்கி கொடுக்கலாம். அந்த தேங்காயைப் பெற்றுக் கொள்ள ஆலயத்துக்குள் தனி இடம் உள்ளது.
    

     மூன்றாம் எண் நுழைவாயில் வழியாக சென்றால் குருஸ்தானுக்கு முன்பு சமாதி மந்திர் ஜன்னல் வழியாக பாபாவை மிக எளிதாக பார்த்து தரிசனம் செய்யலாம்.
  

     சீரடி தேவஸ்தானம் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் அந்த திட்டத்துக்கு பணம் கொடுக்கலாம்.
   

      கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் (லென்டித் தோட்டம் அருகில்) புத்தக விற்பனை நிலையம் உள்ளது. தமிழ் உள்பட எல்லா மொழி புத்தகங்களும் இங்கு கிடைக்கும். வெளியில் வாங்குவதை விட மிக, மிக, குறைந்த விலையில் இங்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
   கோவில் உள்ளே ஒரு இடத்தில் விநாயகர் மற்றும் சிவனுக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன.
   

      திருப்பதி மாதிரி சீரடியிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

 இந்தியாவில் அதிக பக்தர்கள் வரும் முதல் கோவில் திருப்பதி வெங்கடசலபதி கோவில் இரண்டாவது சீரடி சாய்பாபா கோவில்
    சாயி பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் மூன்றாம் எண் கேட் வழியாக வெளியே வந்தால் பாபா வசித்த துவாரகமாயியிக்கும், சாவடிக்கும் மிக எளிதாக செல்லலாம்.
   சீரடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை துவாரக மாயியில் இருந்து சாவடிக்கு பாபா படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. 

  ஆலயத்துக்குள் உண்டியல் தவிர பெரிய அளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்த தனி கவுண்டர் வசதி உள்ளது.

   சீரடியில் பொது மக்கள் கண் எதிரிலேயே தினமும் உண்டியல் பணம் எண்ணப்படுகிறது. உண்டியல் பணத்தை எண்ணி சேவை செய்ய விரும்பும் பொது மக்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
    சீரடியில் பாபாவுக்கு நடக்கும் 4 கால ஆரத்தியில் ஏதாவது ஒரு ஆரத்தியை கண் குளிர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலே அது புண்ணியம் தான்.
கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை பஜன் ஆரத்தி நடக்கிறது. 
    
    சீரடிக்கு வரும் பக்தர்கள் அனைவரும்  ``சாய்நாத் மகாராஜ்க்கு ஜே'' என்று சொல்லத் தவறுவது இல்லை.
    
    சீரடியில் சாதாரண நாட்களை விட வியாழக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் கூட்டம் பன் மடங்கு இருக்கும்.

   சீரடியில் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. வேண்டுதல்கள் வைத்திருப்பவர்கள் இந்த இரு நாட்களில் செல்லலாம்.
   
   சீரடி ஸ்தலத்தக்கு இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.
முன்பெல்லாம் சீரடிக்கு வட இந்திய மக்கள் தான் அதிகம் வந்து சென்றனர். தற்போது தென் இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் சீரடிக்கு  வந்த வண்ணம் உள்ளனர்.

    சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம்.

  உண்மையில் பாபா கோவிலுக்குள் பக்தர்கள் கொண்டு வந்து தரும் எதையுமே ஏற்பதில்லை. நம்மிடமே திருப்பித் தந்து விடுகிறார்கள். ஆகவே பக்தர்கள்   வெறும் கையோடும் மனம் நிறைய பிரார்த்தனைகளை சாய்பாபா சந்நிதானத்தில் மனமுருக வேண்டிக்கொண்டால் போதும்.

   பக்தர்கள் கொண்டு செல்லும் மாலைகளை பாபாவுக்கு போட்டுவிட்டு, ஏற்கனவே சாத்தி இருக்கிற மாலைகளில் ஒன்றை உருவி பிரசாதமாகக தருகிறார்கள்.  

    வெளியே வந்ததும் பாபா அமர்ந்திருந்த மரத்துக்கு எதிரே ஊதுவத்தி ஏற்றி வைத்து  ஊதுவத்தி புகையில் படிந்த கரியை எல்லாரும் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்.
   
   கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. அங்கேயே ஒரு கவுண்டர் வெச்சு எல்லாவற்றையும் வாங்கிக் கொள்கிறார்கள்
    
    கோயிலுக்குள்ள சாயிபஜன் நடந்து கொண்டே இருக்கும். அது கோயில் முழுக்க ஒலிக்கிற மாதிரி ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் வைத்து இருக்கிறார்கள்.
                                                                         வெளியூர் வெளிமாநிலத்தில் இருந்து சீரடி சாய்பாபாவை தரிசிக்க செல்லும் பக்தர்கள் தங்குவதற்க்கு ஷீர்டி கோவில் நிர்வாகம் அடுக்குமாடி குடியுருப்புகளாக சுத்தமான தரமான தங்கும் அறைகளை கட்டியிருக்கிறார்கள் இவ்வறைகள் முற்றிலும் இலவசம் இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

ஆலயத்துக்குள் மினி மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு ரத்ததானம் செய்யலாம்.
  பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆலய வளாகத்துக்குள் ஆம்புலன்ஸ் ஒன்றை எப்போதும் தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறார்கள்.
              
     சீரடியில் பக்தர்கள் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் இலவச சிறந்த மிகப்பெரிய மருத்துவமனை உள்ளது.                                               
 சீரடியில்  நாள்முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் தொடர்ந்து அன்னதானம் செய்யப்படுகிறது.                              

     சீரடிக்கு நினைத்தவுடன் போய் விட முடியாது. சாயி நான்   உன்னை  சரண் அடைந்தேன் என்று மனம் சொல்லி, சொல்லி பக்குபவப்பட்டவர்களை பாபா உடனே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்.                                                                                                                                                       சாய்பக்தர்கள் தம் வாழ்வில் ஒருமுறையாவது ஷீர்டி சென்று சாய்பாபாவின் சமாதிநிலையை நிச்சயம் தரிசிக்க வேண்டும் 

    சாய்பாபாவின் சமாதியை நெருங்கிய அடுத்த கணம் சாய்பாபாவின் அருகாமையையும் அவர் அங்கு உயிருடன் உங்களை ஆசிர்வதிப்பதையும் வாழ்வில் பழைய கவலைகள் மறைந்து  புதியதாக பிறந்ததாக மிகப் பெரிய பலத்தை மகிழ்ச்சியை அடைந்ததாக உணர்வீர்கள் மிகப்பெரிய நிம்மதியை அடைவீர்கள் உங்கள் வேண்டுதல் சத்தியமாக நிறைவேறும்.           

          சீரடி சாய்பாபா தன் பக்தர்களுக்கு 11 உறுதி மொழிகள் கொடுத்திருக்கிறார். அந்த உறுதி மொழிகள் அப்படியே தங்கள் வாழ்வில் நடப்பதை எண்ணி மக்கள் மகிழ்கிறார்கள்.

அந்த 11 உறுதி மொழிகள் வருமாறு:-

1. சீரடிக்கு வந்து சீரடி மண்ணை மிதிப்பவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படாது.

2. என் சமாதியின்படி ஏறுபவனின் அனைத்து துக்கங்களையும் போக்கி விடுவேன்.

3. எனது உடல் இந்த உலகை விட்டு மறைந்தாலும், துன்பம் என்று துயர்படும் பக்தன் மனதால் நினைத்தால் ஓடி வந்து துன்பம் துடைப்பேன்.

4. திட பக்தி உறுதியான நம்பிக்கை பரிபூரண விசுவாசத்துடன் இருக்கும் பக்னீதனின் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.

5. நான் (இறந்து விட்டாலும்) உயிருடன் இருக்கிறேன் என்பதை நீங்கள் உங்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் மூலம் கண்டிப்பாக உணர முடியும். இதை சத்தியமாக நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

6. நானே சரணம் என்று நம்பி முழுவதுமாக என்னை சரணடைந்த பக்தன் எவனும்  வெறுங்கை யோடு திரும்பியதில்லை. அப்படி யாராவது இருப்பின் அவரை எனக்கு அடையாளம் காட்டுங்கள்.

7. எப்படிப்பட்ட உள்ளத்தோடு, பக்தியோடு என்னை அணுகுகிறாரோ அப்படிப்பட்ட அனுபவத்தை நான் அவருக்குத் தருவேன்.

8.  உங்களுடைய சுமைகளை நான் எப்போதும் சுமப்பேன். எனது வாக்கு எப்பொழுதும் எவ்விடத்தும், எந்நிலையிலும், பொய்க்காது.

9. நீங்கள் கேட்ட தெல்லாம் நான் கொடுப்பேன் நீங்கள் கேட்ட வற்றைக் கொடுப்பதற்கு நான் காத்துக் கொண்டிக்கிறேன். உங்கள் வேலை, உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை என்னிடம் கேட்பது தான்.

10. நான் சொல்லுவதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்பவருக்கு நான் என்றென்றைக்கும் கடன் பட்டுள்ளேன்.

11. என் திருவடிகளே கதி என்று சரணாகதி அடையும் பக்தன் பெரும் புண்ணியவான் ஆவான். பெரும் பாக்கியசாலி ஆவான். பிறவி பயனைப் பெற்றவன் ஆவான்.                 

சாய்பக்தர்கள் அனைவருக்கும் சாய்பாபாவின் அன்பும் அருளும் கிடைக்கட்டும்

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் ஜெய் சாயி 

தொகுப்பு : ஆரூர் சுந்தரசேகர்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...