வேளச்சேரி மகான் ஶ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள்.
வேளச்சேரி மகான் ஶ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள். ஆரூர். சுந்தரசேகர். எண்ணிலடங்கா இறை உணர்ந்த மகான்கள், இன்றும் தம் ஜீவசமாதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஜீவசமாதியின் முன் நின்று வணங்கினால் அவர்களின் அருளாசினையை பெற்றிடலாம். இருநூறு ஆண்டுக்கு முன், அப்போது, 'வேதஸ்ரேணி' என்றழைக்கப்பட்டு, தற்போது, வேளச்சேரி என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள, தண்டீஸ்வரர் கோயிலுக்கு வந்து “சிந்தனைக்கெட்டாத சிவரூபத்தை கடின உழைப்பால் காண்” என்ற வாழ்க்கை போதனையை உலகுக்கு உணர்த்திய மகான், “வேளச்சேரி மகான்” என்றும் “சிதம்பர பெரிய சுவாமிகள்” என்று பக்தர்களால் போற்றப்படுகிறார். “வேதஸ்ரேணி எனும் வேளச்சேரி” வந்த சிதம்பர பெரிய சுவாமிகள்: திருச்சிராப்பள்ளிக்கு அருகில் ஆரியம்பாக்கம் என்ற கிராமத்தில் முனியப்பர் மற்றும் பெரியநாயகி என்ற பணக்கார தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் சிதம்பர பெரிய சுவாமி, இவரது இயற்பெயர் வீராசாமி என்பதாகும். தனது ஏழாம் வயதில் பெற்றோரை விட்டு விலகி, துறவறம் மேற்கொண்டு தமது இல்லத்திலிருந்து வெளியேறினார். சிவத்தொண்டுகள் செ...