விகாரி ஆண்டே வருக....மாரியை கொண்டு தருக....
விகாரி ஆண்டே வருக....மாரியை கொண்டு தருக.... ஆரூர் சுந்தரசேகர். விகடகவி வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு (விகாரி) நல்வாழ்த்துக்கள். இந்த தமிழ் புத்தாண்டில் மும்மாரி மழை பொழிந்து நாடு செழித்து வளம் பெருக எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டிக் கொள்வோம். விளம்பி ஆண்டு நிறைவு பெற்று மங்களரகமான விகாரி வருடம், உத்தராயண புண்ணிய காலம் ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி 07 நிமிடத்துக்கு, 14/04/2019 அன்று பிறக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் ஒடிசா மக்கள் மகா விஷுபா சங்கராந்தி என்றும் கொண்டாடுகிறார்கள். இவர்களோடு மணிப்பூர், திர...