பங்குனி உத்திரத்தின் மகிமை...
பங்குனி உத்திரத்தின் மகிமை... ஆரூர் சுந்தரசேகர். நாம் சில நட்சத்திரத்திற்கு சிறப்பினை தந்து விழாக்கள் எடுப்பதும், விரதம் இருப்பதும் வழக்கம், அதில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகையில் வரும் கார்த்திகை, தைப்பூசம் ஆகிய சிறப்பு நட்சத்திரங்களின் வரிசையில் வருவது பங்குனி உத்திரம் ஆகும். பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். கங்கா மேளா, வசந்த உத்சவம், வசந்த பஞ்சமி, மஞ்சள் குளி, டோல் பௌர்ணமி என்று மற்ற மாநிலங்களிலும் பங்குனி உத்திர விரதத்தை கொண்டாடுகிறார்கள். இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகிறது அதில் பார்வதிபரமேஸ்வரர், ராமர்சீதை திருமணம் மேலும் முருகன்-தெய்வானை, ஸ்ரீரங்கநாதர்-ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது. தெய்வங்களின் திருமணம்...