ஸ்ரீ சாயி பாபா மகா சமாதி 100-வது ஆண்டு ( 2018)
ஸ்ரீ சாயி பாபா மகா சமாதி 100-வது ஆண்டு ( 2018) சீரடியில் கோவில் கொண்டு உலகெங்கிலும் தமது அருள் மழையால் அடியவர்கள் அனைவரையும் வாழவைத்த ஸ்ரீ சாயிபாபா 1918 ஆம் ஆண்டு மகா சமாதி ஆனார். இந்த வருடம் 2018 விஜயதசமி திருநாள் முதல், ஸ்ரீசாயிபாபா மகா சமாதி அடைந்து 100-வது ஆண்டு தொடங்குகிறது. சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து விட்டார் என்று கூறப்பட்டாலும், இன்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார். நம்மை காத்து நல்வழிபடுத்துகிறார். அவர் மீது மாறாத நம்பிக்கையும் அன்பும், பக்தியும் கொண்ட வர்கள் அவரது தரிசனத்தைப் பெற்றுள்ளனர். நிறைய பேரிடம் அசரீரியாக பேசியுள்ளார். லட்சக்கணக்கான பக்தர்கள் என்ன வேண்டுகிறார்களோ... அதையெல்லாம் நிறை வேற்றி கண்கண்ட தெய்வ மாக அவர் திகழ்கிறார் தன் பக்தனை அவர் ஒரு போதும் கைவிட்டதே இல்லை. சீரடியில் இருந்த காலம் முழுவதும் எண்ணற்ற பல அற்புதங்கள் நிகழ்த்திய சாயிபாபா , ‘நான் என்னுடைய பூத உடலைத் துறந்து சமாதி சென்றாலும், இப்போது போலவே எப்போதும் உயிருடன் இருப்பேன்; என்னைச் சரணடையும் பக்தர்களின் வாழ்க்கையில் அளவற்...