சென்னை வேளச்சேரியில் ஹரி, ஹரன் கோயில்கள்!!
சென்னை வேளச்சேரியில் ஹரி, ஹரன் கோயில்கள்!! ஆரூர். சுந்தரசேகர். புராணங்களில் ஹரியும், ஹரனும் ஒன்றே என்று பல சம்பவங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஒருமுறை சோமுகாசுரன் எனும் அரக்கன் பிரம்மாவின் சத்தியலோகம் சென்று, நான்கு வேதங்களையும் கவர்ந்து கடலுக்கு அடியில் கொண்டு சென்று சேற்றில் மறைத்து வைத்தான். இதனால் படைப்புத் தொழில் நின்று போகவே பிரம்மா மகா விஷ்ணுவிடம் முறையிட்டார். மகாவிஷ்ணு, மச்சவதாரம் எடுத்து சோமுகாசுரனை அழித்து நான்கு வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார். அசுரனிடம் இருந்ததால் நான்கு வேதங்களும் தங்களுக்கு தோஷம் ஏற்பட்டு விட்டதாக வருந்தி பிரம்மனிடம் கூறினார்கள். பிரம்மாவின் ஆலோசனைப்படி, தோஷங்கள் நீங்குவதற்காக, சிவபெருமானை நோக்கி நான்கு வேதங்களும் கடும் தவம் புரிந்தன. வேதங்களின் வழிபாட்டில் மகிழ்வுற்ற சிவபெருமான் காட்சி தந்து, வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருள் புரிந்தார். இதனால் வேதங்கள் மீண்டும் புனிதமாயின. வேதங்கள் வழிபட்ட இடம் வேதஸ்ரேணி. இதுவே இத்தலத்தின் புராணப்பெயர். தமிழில் வேதநாராயணபுரம் என்றும் அழைக்கப்பட்டது. வேதங்கள் வேள்வி நடத்தியதால...