கார்த்திகை தீபம் ஏற்றுவோம்... வாழ்க்கையில் ஏற்றம் பெறுவோம்...
கார்த்திகை தீபம் ஏற்றுவோம்... வாழ்க்கையில் ஏற்றம் பெறுவோம்... ஆரூர் சுந்தரசேகர். பன்னிரு தமிழ் மாதங்களிள் ஒன்று தான் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதம் என்றதும் அனைவருக்கும் `கார்த்திகைத் தீபத் திருவிழா’ தான் நினைவிற்கு வரும். தமிழகத்தில் தான் கார்த்திகை தீப விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தமிழரின் தொன்மையான பண்டிகை. தீபாவளி, நவராத்திரி பண்டிகைகளைக் கொண்டாட ஆரம்பிக்கும் முன்னதாகவே கார்த்திகை திருவிழா கொண்டாடியதாக சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. கார்த்திகை மாத பௌர்ணமி தினமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளன்று நாம் `கார்த்திகைத் தீபத் திருவிழாவாக கொண்டாடுகின்றோம். கார்த்திகை தீபம் என்றவுடன் திருவண்ணாமலை தீபம் தான் நம் எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கார்த்திகைத் தீபத் திருநாளில் இறைவன் ஒளி ரூபமானவன் என்பதை தத்துவார்த்தமாக விளக்கும் பொருட்டே தமிழர்கள் அனைவரும் கார்த்திகை தீபத் திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டிற்கு உள்ளேயும் தீபங்களை ஏற்ற...