சென்னையிலே பஞ்சபூத ஸ்தலங்கள்!!!
சென்னையிலே பஞ்சபூத ஸ்தலங்கள்!!! ஆரூர். சுந்தரசேகர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த பஞ்சபூதங்கள் சேர்க்கையினால் இந்த பிரபஞ்சமும் மற்றும் ஜீவராசிகளும் உண்டானது. நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் மற்றும் செயலும் பஞ்சபூதங்களை சார்ந்ததாகவே இருக்கும். உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பஞ்சபூதங்களால் தான் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ‘நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும்கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ என்கிறது தொல்காப்பியம். இதனை உணர்த்தும் வகையில் இந்த பஞ்சபூத சக்திகள் ஒவ்வொன்றினையும் கொண்டு கோவில்களை உருவாக்கி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது என்பதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கிய நூலான புறநானூற்றின் மூலம் அறியலாம். தென் இந்தியாவில் கீழ்கண்ட பஞ்ச பூத ஸ்தலங்கள் பக்தர்களிடையே பிரசித்தி பெற்று விளங்குகின்றன. நிலம் (ஶ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்) நீர் (ஶ்ரீஜம்புலிங்கேஸ்வரர் கோயில், திருவானை...